in ,

நடனமாடி பட்டையை கிளப்பும் ஷிவானி!

ஷிவானி

விஜய் டிவியின் பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

பின்னர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார் என்றும், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.லாக்டவுனில் நடிகைகளை விட மிகப்பிரபலமான ஆளாக மாறிவிட்டார்.

சில நாட்களுக்கு முன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சாரியில் ஒரு நடன வீடீயோவை ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது, இதனை முன்னிட்டு அந்த வீடியோவின் வெளியிடப்படாத ஒரு பகுதியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் ஷிவானி.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

செல்வராகவன் வீட்டுக்கு புது வரவு… வைரல் புகைப்படம்

biography

ஸ்வேதா அவஸ்தி விக்கி, சுயசரிதை, வயது, குடும்பம், திரைப்படங்கள், படங்கள்