in , ,

பிக்பாஸ் சீசன் 4 படப்பிடிப்பு எப்போது தெரியுமா? விவரம் இதோ!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய மூன்று பிக்பாஸ் சீசனும் பெரிய வெற்றியை பெற்றன.

அத்துடன், இந்த மூன்று சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலங்களாக மாறிவிட்டனர்.

இதனையடுத்து, நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்ததுடன், கமல் தொகுத்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தாக்கத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு தள்ளிப்போவதால் கமல் இந்த தொடரில் பங்கேற்கமாட்டார் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அரசு அனுமதியுடன் சீரியல் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளதால், விரைவில் பிக்பாஸ் சீசன் 4 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னதாக திட்டமிட்டத்தை விட சற்று தாமதமாக தொடங்கலாம் என்று கூறப்படுகின்றது.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

பிரபல நடிகரின் இறுதி இன்ஸ்டா போஸ்ட்

கொரோனாவை எதிர்த்து பேராடும் ஜேம்ஸ்பாண்ட்