in , ,

பிரபல நடிகரின் இறுதி இன்ஸ்டா போஸ்ட்

நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

கன்னட சினிமாவின் பிரபல ஹீரோவான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நேற்று முன்தினம் கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

39 வயதான அவரது மரண செய்தி தென்னிந்திய திரைப்படத்துறையே உலுக்கியது.

அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல், துருவா சர்ஜாவின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

இந்நிலையில் அதுவே அவரது கடைசி பதிவானதால் நேற்று முதல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.. கடவுள் மிகவும் கொடூரமானவன் என்றும் தங்களின் ஆதங்கத்தை அதிர்ச்சியைம் கண்ணீர்மல்க பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

நிர்வாண ஆயில் மசாஜ்… இணையத்தை கதறவிடும் டிஜரத்!

பிக்பாஸ் சீசன் 4 படப்பிடிப்பு எப்போது தெரியுமா? விவரம் இதோ!