in , ,

திடீர் அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு.. என்னவாம்!

நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், கொரோனா பற்றியும் கூறியுள்ளார்.

டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன்.

எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும்.

இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, காஜா புயல், என எத்தனையோ இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்.

நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்தக் கொரானா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.

மனதளவில் தளர்ந்துபோய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம் என்று கூறியுள்ளார் சிம்பு.

What do you think?

Written by ஜோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

வனிதாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம்

பிரபாஸ்

பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் மீண்டும் ஒரு பாகுபலி.. பர்ஸ்ட் லுக் இதோ!