வீட்டிலேயே பீர் தயாரித்த பெண் சிக்கினார்... காரணத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

2 months ago 179

சென்னை திருவெற்றியூர் குப்பம் அருகே ஜெஜெ நகர் பகுதியில் வீட்டில் மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்து பெண் ஒருவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில்,  வீட்டில் தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை நான்கு முறை சிறை சென்று விட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இதுபோன்று வீட்டில் மதுபானங்கள் தயாரித்து வந்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.