மீண்டும் கிசுகிசுவில் சிக்கிய அனுபமா பரமேஸ்வரன்..! விரைவில் திருமணமா?

2 months ago 159

ஏற்கனவே, நடிகை அனுபமா பரமேஸ்வரனும் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவரும் காதலித்து வருவதாக அரசால் புரசலாக தகவல் வெளியான நிலையில்,  நடிகை அனுபமாவின் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தார்.

 இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐயும் இந்த விடுப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இதை தொடர்ந்து,  நடிகை அனுபமாவும் தன்னுடைய இன்ஸ்டாவில் Happy holiday to me எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். 

இது தான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம். ஏற்கனவே காதல் கிசுகிசு எழுந்த போது,பூம்ரா தன்னுடைய நண்பர் மட்டுமே என கூறி இருந்தார் அனுபமா.

ஏற்கனவே தாறுமாறாக யோசிக்கும் நெட்டிசன்கள், இவர்கள் இருவருமே ஒரே நேரத்தில், ஓய்வு வேண்டும் என கூறியுள்ளதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என, கொளுத்தி போட அந்த தகவல் காட்டு தீ போல் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே, நண்பர்கள் என கூறிய பின்பே காதலர்கள் என ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இவரது கதையும் அதே போல் இருக்குமா? அல்லது இது வதந்தியாகவே கடந்து செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மலையாளத்தில் சூப்பட் டூப்பர் ஹிட் அடித்த “பிரேமம்’‘ படத்தில் அறிமுகமான நடிகை அனுபமா தமிழில் நடிகர் தனுஷ் நடித்த “கொடி“ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். 

தற்போது தமிழை தாண்டி. கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.