பாலாடை மேனியை பளீச்சென காட்டும் வெந்நிற உடையில்... மாலத்தீவில் தொகுப்பாளினி டி.டி

2 months ago 243

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், நடிகர் நடிகைகள் பலர் மாலத்தீவிற்கு தொடர்ந்து சுற்றுலாவிற்காக படையெடுத்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவி டிடி, மாலத்தீவிற்கு சென்று வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில்... மாலத்தீவின் கடல் அழகின் பின்னணியில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஹெலனா ' பாடலுக்கு ஏற்ற போல் விஜய் டிவி டிடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். 


கண்ணில் கூலிங் கிளாஸ், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் அழகில் தெறிக்க விடுகிறார்.

நடிகை காஜல் அகர்வால் ஹனி மூன் சென்று வந்த பின், வரிசையாக ராகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஹன்சிகா, சமந்தா, நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் மாலத்தீவை கண்டு கழித்த நிலையில், டிடியும் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 


அவ்வப்போது மாலத்தீவில் அழகை ரசித்தபடி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், நயன்தாரா பாடலுடன் கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளது அல்டிமேட்.