படுத்திருப்பது மனிதன் கிடையாது! கேக்... நம்புங்க பாஸ்!

2 months ago 259

மனிதர் ஒருவர் படுக்கையில் படுத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட கேக் பற்றிய புகைப்படம் வைரலாகி  வருகின்றது.

பொம்மை வடிவ கேக்குகள், இதய வடிவ கேக்குகள் என வித்தியாச கேக்குகளை கண்டிருப்பீர்கள். ஆனால் இது இன்னும் வித்தியாசமான கேக்!

இங்கிலாந்தை சேர்ந்த கேக் தயாரிப்பாளரான பென் கல்லன் என்பவர், மனித வடிவிலான கேக் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார்.

மருத்துவமனை பெட்டில், ஒருவர் படுத்திருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த கேக், நிறம் முதற்கொண்டுபார்ப்பதற்கு உண்மையான மனிதன் படுத்திருப்பது போன்றே உள்ளது.

பார்த்தால் உங்களுக்கும் ஆச்சரியம் தான் மிஞ்சும். இந்த புகைப்படம் தான் தற்போது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.