துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வைரல் போட்டோஸ்...!

2 months ago 130

கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வெளியில் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகின்றன. 

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ஹெச்.வினோத் அறிவித்திருந்தார். 


இதனால் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்கள் தலைகால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


அப்டேட் கேட்டு ரசிகர்கள் அடிக்கும் கூத்தை பார்க்க முடியாமல் அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொது இடங்களில் கண்ணியத்துடன் நடக்க வேண்டும் என்றும், உரிய நேரத்தில் வலிமை அப்டேட் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.


தற்போதைய நிலவரப்படி வலிமை படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு ஓவர், மீதமிருக்கும் முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை ஸ்பெயினில் படமாக்க காத்திருக்கிறது படக்குழு.


இதனிடையே கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வெளியில் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகின்றன.