திரிஷ்யம் 2 படத்தை திரையரங்குகளில் வெளியிட எதிர்ப்பு.. ஏன் தெரியுமா?

2 months ago 157

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல்  வெளியான திரிஷ்யம் பாரிய வெற்றியை பதிவுசெய்தது. ரூ.5 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து அனைவரையும் வாயை பிளக்க வைத்தது.

இந்த திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியாகியிருந்தமை உங்களுக்கு தெரியும்.

இந்நிலையில், தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி உள்ளது.  வருகிற 19-ந் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளதுடன், அதே நாளில் கேரளா முழுவதும் தியேட்டர்களிலும் திரிஷ்யம் 2 படத்தை வெளியிட முயற்சிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஓ.டி.டியில் வரும் திரிஷ்யம் 2 படத்தை தியேட்டர்களில் திரையிடமாட்டோம் என்று கேரள திரைப்பட வர்த்தக சபை தடாலடியாக அறிவித்து உள்ளது. ஓ.டி.டியில் வெளியாகும் எந்த படத்தையும் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்.