தண்ணீரில் கால் வைத்தால் சிலையாக மாறும் அதிசயம்... ஏன் தெரியுமா..?

2 months ago 157

ஏரியில் தண்ணீரை பார்த்தால் நாமெல்லாம் அதை எடுத்து பருக நினைப்போம். ஆனால்  ஒரு ஏரியில் மிகப்பெரிய ஆபத்துஒளிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா பகுதியில் நாட்ரான் என்னும் 3 மீட்டருக்கும் குறைவான ஆழம் கொண்ட ஏரி உள்ளது. செந்நிறத்தில் மிக அழகாக இருக்கும் இந்த ஏரி ஆபத்தும் நிறைந்தது.


இந்த ஏரியில் தண்ணீர் குடித்தால் நம் உயிரே போய்விடுவதுடன் அப்படியே சிலையாக மாறிவிடுவோம்.

இந்த ஏரியில் உப்புத்தன்மை மிக அதிகம். இதன் பி.ஹச் மதிப்பு பத்திலிருந்து 12 வரை. அந்தவகையில் உலகிலேயே அதிக உப்புத்தன்மை கொண்ட ஏரி இதுதான். 


கூடவே இந்த ஏரிக்கு பக்கத்திலேயே எரிமலை குழம்பு ஒன்றும் இருக்கிறதாம். அதுவும் இந்த அளவுக்கு உப்புத்தன்மையாக காரணம். எரிமலைக்குன்றில் இருந்து வெளியாகும் அதிகளவு உப்பினை கொண்டுதான் எகிப்தியர்கள் இறந்த உடலையே பதப்படுத்தினார்கள்.

இந்த உப்புத்தன்மையின் காரணமாகத்தான் பறவைகள் நீரைக் குடித்தவுடனேயே உயிரை விட்டு அப்படியே பதப்படுத்தப்பட்ட சிலையாகவே நிற்கின்றனவாம்.