தங்க நாக்கு கொண்ட மம்மி... 2000 ஆண்டு பழமையானதாம்!

2 months ago 90

பண்டைய எகிப்தில் புதைக்கப்பட்ட தங்க நாக்கு கொண்ட ஒரு கவர்ச்சியான, புதைக்கப்பட்ட மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மம்மி 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தங்க நாக்கு கொண்ட இவர்களால், கடவுளுடனோ அல்லது இறந்த பிற ஆத்மாக்களுடனோ உரையாட முடியும் என்று நம்பப்படுகிறது. 


எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேத்லீன் மார்டினெஸ் என்பவரால் தபோசிரிஸ் மேக்னாவில் இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த இடத்தில் பாதாள உலக கடவுள் ஒசைரிஸ் மற்றும் அவருடைய மனைவி ஐசிஸ் மற்றும் சகோதரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் உள்ளன. 

இதே இடத்தில், கிளியோபாட்ராவின் முகம் பொறிக்கப்பட்ட பல நாணயங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டன. 

தங்க நாக்கு மம்மி தவிர இந்த இடத்தில் மேலும் 15 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் 2,000 ஆண்டுகள் பழமையானவை.