ஜப்பான் நீர் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள்

2 months ago 120

சீன கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் செங்காகு தீவு அருகே உள்ள ஜப்பானின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் இந்த 4 கப்பல்களும் நேற்று அதிகாலை வரை ஜப்பான் எல்லைக்குள்ளேயே இருந்துள்ளன. இதனையடுத்து, சீன கடற்படையின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஜப்பான் சீனாவிடம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

“சீன ரோந்து கப்பல்கள் நம் நாட்டின் பிராந்திய நீரில் நுழைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தூதரக ரீதியாக சீன தரப்பிடம் நமது வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என  ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் கட்சுனோபு கட்டோ கூறியுள்ளார்.