சொந்த அக்காவை கர்ப்பிணியாக்கிய தம்பி... அதிர்ச்சி சம்பவம்

2 months ago 409

அக்காவை சொந்த தம்பியே தகாத உறவுகொண்டு கர்ப்பிணியாக்கிய சம்பவம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள அம்பாறை – திருக்கோவில்  என்ற ஊரில் 16 வயதுச் சிறுவன், தனது இரண்டு சகோதரிகளுடன் வாழ்ந்து வருகின்றான்.

இரு பெண் பிள்ளைகள் மற்றும் சிறுவன் உட்பட 3 பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு தந்தை சென்றுவிட்ட நிலையில்,  தாய், 3 பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றார்.


இந்நிலையில், தனது 23 வயது சகோதரியை 16 வயதுச் சிறுவன் 3 மாத கர்ப்பிணியாக்கி உள்ளனார்.

குறித்த சிறுவனின் இரண்டாவது சகோதரி, கல்முனையில் வீடு ஒன்றில் வீட்டுவேலைக்குச் சென்று வருவதாகவும் தம்பியும் சகோதரியும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறித்த சகோதரி வாந்தி எடுத்து நிலையில், கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவரையும் திங்கட்கிழமை கைது செய்த போலீசார், குறித்த பெண்ணை அங்குள்ள மருத்துவமைனயில் அனுமதித்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சொந்த அக்காவை தம்பியே கர்ப்பிணியாக்கி சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.