செவ்வாயில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ்.. புகைப்படம் வெளியானது!

2 months ago 118

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக  தரையிறங்கியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 

செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று நெருங்கியதால் விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியிருந்தனர்.

தற்போது, செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.