காதலிக்கு பிறந்த நாள் பரிசளிக்க இந்த காதலன் எதை திருடியிருக்கார் பாருங்க!

2 months ago 128

கடந்த 14-ந் தேதி கொண்டாடப்பட்ட சர்வதேச காதலர் தினத்தில்  காதலர்கள் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப் படுத்தினர்.

துபாயில் வசித்து வரும் வாலிபர் ஒருவரின் காதலிக்கு காதலர் தினத்தில் பிறந்த நாள் வந்தது. எனவே,  காதலிக்க ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என காதலன் திட்டமிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டக பண்ணைக்கு சென்று ஒட்டக குட்டி ஒன்றை திருடிக்கொண்டு வந்து காதலிக்கு பரிசாகவும் கொடுத்தார். 

இந்த நிலையில் ஒட்டக பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டியை பிறந்து சில மணி நேரங்களே காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்தார்.


போலீசார் ஒட்டக குட்டியை தேடி வருவதாக தகவல் கிடைத்ததும் வாலிபரும், காதலியும் அதிர்ச்சியடைந்தனர். 

அந்த வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனை திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். 

பின்னர் போலீசுக்கு போன் செய்து ஒட்டக குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாக கூறினார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரிக்க அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். 

அந்த பண்ணைக்கும், அடுத்த பண்ணைக்கும் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை கடந்து ஒட்டக குட்டி வர வாய்ப்பில்லை. 

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் ஒட்டக குட்டியை திருடியதை ஒப்புக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் ஒட்டக குட்டியை திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தை பரிசாக பெற்ற காதலியையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.