கடனைத் திருப்பிச் செலுத்த 2 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தந்தை!

2 months ago 165

கடும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த தந்தை ஒருவர், கடனை திருப்பிச் செலுத்த தனது மகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம்உத்தரபிரதேசத்தின் மீரட் நகரின் பார்த்தாபூர் பகுதியில் நடந்துள்ளது. 

தனது தந்தை தன்னை கடன் வாங்கிய நபருக்கு ரூ 2 லட்சத்திற்கு விற்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தாயுடன்பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கண்காணிப்பாளரை அணுகி புகார் அளிக்க இந்த விடயம் தெரியவந்துள்ளது.

லாரி ஓட்டுநரான குறித்த பெண்ணின் தந்தை பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி திகார் மற்றும் தஸ்னா சிறையில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், கடனளித்தவர் விற்பனை செய்யப்பட்ட பெண்ணை ஒரு வருடம் பணயக்கைதியாக வைத்திருந்துள்ளதுடன்,  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

குறித்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி, தனது தாயின் உதவியுடன் போலீஸைத் தொடர்பு கொண்டுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.