உங்களை ரொம்பு பிடிக்கும்... நடிகர் வடிவேலுக்கு அழைப்பு விடுவித்த சர்ச்சை நடிகை...

2 months ago 145

தான் சொந்தமாக எடுக்கவுள்ள படத்தில் விருப்பமிருந்தால் நடிக்கலாம் என முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவுக்கு சர்ச்சை நடிகை மீரா மிதுன் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு ஒரு சில பிரச்சினைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில், எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை  என கூறி வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலைப் பாடி கண்கலங்கியுள்ளார். 

இந்தநிலையில் மீரா மிதுன் அவருக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”உங்களது தெனாலிராமன் படம் பார்த்திருக்கேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விளக்கமே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

நீங்கள் கலங்கவே கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கவுள்ளேன். அதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடியுங்கள்” என்று கூறியுள்ளார்.