இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இப்போ பிரபலமான நடிகை..!

2 months ago 188

நடிகர் மகேஷ் பாபு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா?இப்போ அம்மணி பிரபலமான நடிகை..!

நடிகர் மகேஷ் பாபு கையில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இப்போது பிரபலமான நடிகையாவார். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம்வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத்திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 


2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார். அந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார்.

ஸ்ரீதிவ்யா துளியும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார். அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன. 

அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்தக் குழந்தை நடிகை ஸ்ரீதிவ்யா தான். ஸ்ரீதிவ்யா இப்போது அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்னும் படத்தில் நடித்துவருகிறார். 

ஸ்ரீதிவ்யா கடந்த 2000வது ஆண்டில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான யுவராஜூ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அப்போது எடுத்த புகைப்படம் தாம் இணையத்தில்  வைரல் ஆகிவருகிறது.